நான் விரும்பிக்கேட்கும் வானொலி நேஷனல் பப்ளிக் ரேடியோ (NPR). ஒரு நாள், 2000ம் ஆண்டிற்கான மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற்ற எரிக் கேன்டல்-ஐ பேட்டி கண்டார்கள். மூளைத்திசுக்களில் (brain cells - neurons) ஞாபகங்கள் எப்படி பதிவாகின்றன என்று ஆராய்ந்து அறிந்ததற்கு இவருடையக் குழுவினருக்கு இப்பரிசு. இந்த ஆராய்ச்சிக்கு இவர் கடல் நத்தைகளை பயன்படுத்தினார். இந்நத்தைகளின் நரம்பு மண்டலம் குறைந்த அளவில் நியூரான்களைக்கொண்டு இருந்ததாலும் அந்த நியூரான்கள் வெறும் கண்ணாலேயே் பிரித்தறியும்படி அளவில் பெரிதாக இருந்ததாலும், மற்ற உயிரினங்களைக்காட்டிலும் இவை இவரது ஆய்விற்கு ஏற்றதாக இருந்தன.
அவருடைய இணையதளத்திற்கு சென்று பார்த்த போது, நோபல் பதக்கத்தை ஒரு நத்தை அணிந்திருப்பதைப்போல படம் கண்டேன். நத்தைக்கு எம் நன்றி.
0 மறுமொழிகள்:
Post a Comment