ஐந்து விரல்கள் - ஓஷோ

Thursday, April 01, 2010


ஓஷோவின் சொற்பொழிவுகளைப் போலவே, ஆசிரமத்தில் இருந்து வெளியாகும் இசைத் தொகுதிகளும் வெகு இனிமையானவை. நான் பல ஆண்டுகள் முன்பு வாங்கிய, "ஐந்து விரல்கள்" என்ற இசை ஒலிநாடாவில் முன்னுரையாக அவர் இசையைப் பற்றி சொன்ன கருத்தையும் பதிந்திருந்தார்கள். தளர்ந்துபோன குரலில் பேசி இருந்தாலும் அந்த வார்த்தைகள் என்னுள்ளே இப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதன் தமிழாக்கம் இங்கே:

நீங்கள் என் கையில் ஐந்து விரல்களைப் பார்க்கிறீர்கள். சிலர் விரல்களிடையே ஐந்து வெளிகளைக் காணக்கூடும். பொதுவாக நீங்கள் இந்த வெளிகளை உணர்வதில்லை. உங்களுக்கு விரல்கள்தான் தெரிகின்றன. ஆனால் இந்த வெளியோ நிரந்தரமானது. விரல்கள் தோன்றும் மறையும், வெளி எப்போதும் இருக்கிறது. இசையின் ஓசைகளுக்கு இடையே அமைதி வெளிகள் உள்ளன. ஆழ்ந்த இசையின் ஆதாரம் ஒலிகளன்று, அமைதி வெளிகளேயாகும். ஒலி எழும் மறையும். அமைதி நிலைத்திருக்கிறது. வேறு எதையும் விட இசையால் அந்த வெளிகளை அழகாகப் புலப்படுத்த முடியும்; எனவேதான் மௌனத்திற்கு அடுத்ததாக இசையை சொல்கிறேன்.  - ஓஷோ


You see my five fingers - but somebody can see the five gaps between my fingers. But ordinarily you will not see the gaps. You will see five fingers. But the gaps are more real. Fingers come and go, gaps will remain. Between sounds of music, there are gaps of silence. The authentic music consists not of sound, but of the gaps. Sounds come and go. Those gaps remain. And music can make you aware of those gaps more beautifully than anything else; hence I have to say that music comes next to silence. - Osho


இசையின் சிறு பகுதிகளை இங்கே கேட்கலாம்:
http://www.legalsounds.com/download-mp3/music-from-the-world-of-osho/five-fingers/album_36270

3 மறுமொழிகள்:

கபீஷ் said...

நல்லாருக்கு ம்யூஸிக். பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

:-)

குலவுசனப்பிரியன் said...

நன்றி கபீஷ்.

Post a Comment