Scratch - ஸ்க்ராட்ச், சிறுவர் பயில எளிய நிரலி

Saturday, April 10, 2010

சிறார்கள் எளிதில் கணினி நிரல்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நிரல் மொழிதான் ஸ்க்ராட்ச். இதன் சிறப்பு அம்சம் இதன் இடைமுகப்பு. நிரலின் கட்டகங்களை, ஏறக்குறைய தீப்பெட்டி அடுக்குவது போல சுட்டியை வைத்தே உருவாக்கிக்கொள்ளலாம். கீழே உள்ள படங்களைப் பார்த்தாலே புரியும் விரிவாக விளக்கவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். மேலும் கட்டகங்களில் சொற்களை பொருத்திக்கொள்ள வசதி இருப்பதால், கட்டளைகளை வேண்டிய மொழிகளில் அமைத்துக்கொள்ள முடிகிறது.

புகழ் பெற்ற மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) ஆராய்ச்சியாளர்கள் 2007ல் இதை தயாரித்து வெளியிட்டனர்.இந்தி, கன்னட மொழியாக்கங்கள் தயாராக இருந்தாலும் தமிழ் மொழியாக்கம் இல்லை. எனவே நானே சில சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன். நீங்கள் விரும்பினால் இணைத்துள்ள கோப்பை (ta.po) ஸ்க்ராட்ச் நிறுவியுள்ள இடத்திற்கு அடியில் locale/ அடைவில் சேர்த்துக்கொள்ளவும். இங்கே மற்ற மொழி கோப்புகளைக் காணலாம் (உ.ம் kn.po கன்னடம்). நிரைய பேருக்கு இது பயனுள்ளதாக இருந்தால், மேலும் மெருகேற்றி சோதனைகளுக்குப் பின் MITக்கு அனுப்பினால் அடுத்த வெளியீடுகளில் சேர்த்துக்கொள்வார்கள். இது என்னுடைய பரீட்சார்த்த முயற்சி மட்டுமே, உங்களில் யாருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் மாணவர்களுக்கு இதுமட்டும் போதாது. எப்படி உபயோகிப்பது என்ற பாடங்களையும் தமிழில் தரவேண்டும்.நிரைய உதாரணங்கள், ஒலிக்கோப்புகள் கூடவே வருகின்றன. மேலும் உங்கள் ஆக்கத்தை எளிதாக மற்றவர்களுடன் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் ஸ்க்ராட்ச் நிறுவிக்கொள்ளவில்லை என்றாலும், உலவி மூலமே பயன்படுத்திக்கொள்ள முடியும். 500 ஆயிரம் பேர்களுக்கு அடுத்து 18 மில்லியன் நிரலிகளை இப்படி பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ் மாணவர்களும் பங்கெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

சிறு குறிப்பு, ஸ்க்ராட்சில் தமிழ் தட்டச்சு செய்ய முடிவதில்லை. வேறு இடங்களில் எழுதி வெட்டி ஒட்டினால் ஏற்றுக்கொள்கிறது. மேலதிக உதவி வேண்டுமானால் செய்ய சித்தமாய் உள்ளேன்.

உசாத்துணைகள்:

8 மறுமொழிகள்:

வடுவூர் குமார் said...

Thanks for Sharing.

குலவுசனப்பிரியன் said...

வ்ருகைக்கு நன்றி குமார்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பார்வையாளன் said...

excelent

குலவுசனப்பிரியன் said...

கருத்துக்கு நன்றி பார்வையாளன்.

Dr.P.Kandaswamy said...

குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,

இன்றுதான் முதல்முறையாக உங்கள் பிளாக்கில் நுழைகிறேன். மாலை மரியாதை ஒன்றும் வேண்டாம், சும்மா வாங்கன்னு கூப்பிட்டா போதும்.

எங்கூர்லதான் GCT யிலெ படிச்சிருக்கீங்க போல இருக்கு. அப்ப சாய்பாபா காலனிலெ பூந்து வெளயாடிருப்பீங்க. நான் அங்கனதான் சிவசக்தி தியேட்டர் தொட்ட ரோட்டில குடியிருக்கேன்.

குலவுசனப்பிரியன் said...

ஐயா வாங்க. நீங்க வந்ததுல நொம்ப சந்தோசமுங்க ஐயா. நான் அப்படி எல்லாம் ரவுசு உடரதில்லிங்க ஐயா. என் படிப்பு உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பனுங்க. டிப்ளொமா படிக்கிறப்ப கூட்டாளிங்க கிட்ட வழி கேட்டா, ஏதாவது சினிமா கொட்டாயத்தான் அடையாளமா சொல்வாங்கங்க. எனக்கு அதுல ஒண்ணு கூட இருக்கும் இடம் தெரியாதுங்க. ஆனா பாருங்க கனி எலெக்ட்ரானிக்ஸ், சன்ரைஸ் எலெக்ட்ரொனிக்ஸ் கடைகள் இருக்கற ஒப்பணக்கார வீதி தெரியுமுங்க.

எனக்கு பொண்ணு எடுத்தது சுந்தராபுரமுங்க. அடுத்தவாட்டி ஊருக்கு வற்றங்காட்டிக்கி உங்களை அவசியம் பாக்க வரனுங்க ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுகளாகத் தரும் கோவைக்காரரின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Post a Comment