பாரம்மா நான் ஒரு கையில் 31 வரை எண்ணுகிறேன்.

Thursday, April 08, 2010

சாதாரணமாக ஒரு கையை வைத்து 5 வரை எண்ணலாம், அது எப்படி 31 வரை எண்ணுவது? கணினி போல இரும குறியீட்டை (binary coding) பயன்படுத்தினால் முடியும்.

நாம் விரல் விட்டு எண்ணுவது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு கோடு இழுப்பது போன்று.

அதாவது :
1 = |, 2 = ||, 3 = |||, 4 = ||||, 5 = |||||

அச்சு வடிவங்களில், இந்த கற்காலக் குறியீட்டிலிருந்து தசமக்குறியீட்டிற்கு (0,1,2, ...,9) மாறிக்கொண்டோம். அச்சில் உள்ளது போல நாம் ஒவ்வொரு விரலையும் 10 விதமாகக் கோணிக்கொள்ள முடியுமானால், நாம் ஒரேக் கையில் 99,999 வரை எண்ணிக்கொள்ளலாம் இல்லையா. (ஒருவேளை சிம்பு செய்யக்கூடும்)

இருமக்குறியீட்டில் எண்களை எப்படி எழுதுகிறோம்:

இரும முறையில் இரண்டு குறியீடுகள் 0 மற்றும் 1 மட்டுமே வைத்து எண்களைக் குறிக்கிறோம்.

தசமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 10ன் மடங்காக 1, 10, 100 என்று அதிகரிப்பது போல, இருமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 2ன் மடங்காக 1, 2, 4, 8 என்று அதிகரிக்கிறது.

25-ஐ தசமத்தில் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.
2 பத்து + 5 ஒன்று
2 x 10 + 5 x 1 = 25

அதுவே இருமத்தில் இவ்வாறாகும்: 11001
1 பதினாறு + 1 எட்டு + 0 நான்கு + 0 இரண்டு + 1 ஒன்று
1 x 16 + 1 x 8 + 0 x 4 + 0 x 2 + 1 x 1 = 25


இருமத்தின் குறியீடுகள் இரண்டையும், சுழி (0) மற்றும் ஒன்றை (1) குறிக்க விரலை எளிதாக மடித்தும் உயர்த்தியும் காட்ட முடியும்.

அதன்படி கையில் கட்டை விரல்(16), ஆள் காட்டி விரல்(8) மற்றும் சுண்டு விரல்களை(1) உயர்த்தி மற்ற விரல்களை மடித்துக்காட்டினால் 25 என்று புரிந்து கொள்ளலாம். உபரித் தகவலாக இந்தக் முத்திரை சைகை மொழியில் நான் உன்னை விரும்புகிறேன் என்பதைக் குறிக்கும்.

ஐந்து இலக்க இரும எண்ணில் 0-இருந்து 31 வரை குறிக்கலாம்
00000 = 0
00001 = 1
00010 = 2
00011 = 3
00100 = 4
00101 = 5
00110 = 6
00111 = 7
01000 = 8
01001 = 9
01010 = 10
01011 = 11
01100 = 12
01101 = 13
01110 = 14
01111 = 15
10000 = 16
10001 = 17
10010 = 18
10011 = 19
10100 = 20
10101 = 21
10110 = 22
10111 = 23
11000 = 24
11001 = 25
11010 = 26
11011 = 27
11100 = 28
11101 = 29
11110 = 30
11111 = 31

சரி 10 விரல்களில் எத்தனை வரை எண்ணலாம்: 1023

5 மறுமொழிகள்:

Raja said...

நீங்க நிச்சயம் சிம்புவுக்கு சொந்தகாரர் தான். நல்ல பகிர்வு.

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசூரான்.

Seemachu said...

குலவுசனப்பிரியன், அசத்திட்டீங்க..

வாழ்த்துக்கள்.. நானும் இனிமே 2 கையிலும் 1023 வரை எண்ணுவேன்..

குலவுசனப்பிரியன் said...

வாங்க சீமாச்சு.
4 காமிக்கிறப்ப நடுவிரல கொஞ்சம் மறைச்சி வீரியத்தைக் குறைங்க.

இராஜராஜேஸ்வரி said...

. நல்ல பகிர்வு.பாராட்டுக்கள்.

Post a Comment