சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை

Monday, January 30, 2012

SODIS - Solar Disinfection (சூரியஒளி சுத்திகரிப்பு) என்பதின் சுருக்கம். சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எளிய நீர் சுத்திகரிக்கும் முறை. அவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார்கள். நம்நாட்டு மக்களுக்கும் இம்முறை பெரிதும் உதவும்.


தேவையானது தண்ணீர் புட்டிகளும் சூரிய ஒளியும்தாம். நிறமற்ற PET (Polyethylene terephthalate) வகை பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிப்பது நல்லது. பயப்பட வேண்டாம், நம்மூரில் இப்போது சர்வசாதாரணமாக கிடைக்கும் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அந்த வகைதாம். அந்த புட்டிகளில் குடிநீரை பிடித்து சூரிய வெளிச்சத்தில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும். வெயில் அதிகம் இருக்கவேண்டுமென்பதில்லை. வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்துவிடுகின்றன. உடனே உட்கொள்ள ஆரம்பிக்கலாம்.


இம்முறையின் எந்த அளவு செயல்படுகிறது என்று அறிவதுதான் இந்த ஆண்டு பள்ளியில் மகள் எடுத்துக்கொண்ட அறிவியல் புறத்திட்டு. கொதித்து ஆறிய, சுத்திகரிக்கப்பட்ட, மற்றும் சுத்திகரிக்காத நீரின் மாதிரிகளை - பெத்திரிகிண்ணங்களில் சோதனை செய்தோம்.
சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:சுத்திகரிக்கப்படாத நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:கொதிவைக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:
எதிர்பார்த்தது போல கொதிக்கவைக்கப்பட்ட நீரில் எந்த கிருமிகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரில், வெறும் தண்ணீரைவிட பாக்ட்டீரியா எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் சோதித்தது குடிநீருக்கு பதில் வீட்டின் பின் இருக்கும் நீர்குட்டையிலிருந்து மாதிரிகளை சேகரித்ததால், சுத்திகரிப்பு அவ்வளவாக செயல்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நீர் கிடைக்காத தருணங்களில், நீரை கொதிக்கவைக்கவும் இயலவில்லை எனில் குறைந்தபட்சம் சாடிஸ் முறையை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உட்கொள்ளல் நலம்.

8 மறுமொழிகள்:

Kumaran said...

நல்ல பயனுள்ள தகவல்..அனைவரும் படிக்க வேண்டியதும் கூட.நன்றி

க ரா said...

அருமையான பகிர்வு பத்மநாபன் சார்.. எப்படியிருக்கிங்க..

குலவுசனப்பிரியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.

வாங்க, அன்பின் இராமசாமி.
வேறு வேலை தேடிக்கொண்டதில், சற்று ஓய்வாய் இருப்பதால், எழுத சற்று நேரம் கிடைத்தது. நீங்க நலமா?

க ரா said...

நல்லா இருக்கேன் பதம்நாபன் சார் :)))

thequickfox said...

மிக பயனுள்ள தகவல்.நான் வேறு பிரியனின் தளம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் அது பயனுள்ள தகவல் தரும் குலவுசனப்பிரியனின் தளம்.

ராஜி said...

பயனுள்ள பதிவு. முயன்று பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ

Guna said...

உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்

நன்றி
குணா

T.N.MURALIDHARAN said...

எளிய முறையில் தூய நீரை தயாரிப்பது என்பதை சொலி இருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள பதிவு.
என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி.

Post a Comment