ஊமை கனவுகண்டால்

Tuesday, October 02, 2012

கடந்த ஒரு மாதமாக நானும் என் மகளும் சைகை மொழி கற்று வருகிறோம். அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்திற்கு பல வித மாலை வகுப்புகள் நடத்துகிறார்கள். என் மகனோடு உரையாட உதவும் என்பதால் சேர்ந்தோம். வகுப்பு ஆசிரியை சின்ன வயது பெண் 10 ஆண்டுகளாக சைகை மொழி பயின்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.
வகுப்பில் படிக்கும் சிலர் சிறிது நேரம் சைகை செய்தாலே எங்கள் கை வலிக்கிறது நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன சில விடயங்கள் ஆச்சரியமாக இருந்தன..
எப்படி நமக்கு குறைந்த பயன்பாடு காரணமாக விரைவில் மூட்டு வலி ஏற்படுகிறதோ, அதே போல வாய் பேச்சு குறைந்த சிலர், வலுக்கட்டாயமாக பேச முயற்சித்தால் இரத்த வாந்தி எடுப்பார்கள் என்றார். எனவே தொடர்ந்து பழகினால் தசைகள் வலுபெற்று வலி குறையும் என்று கருத்து சொன்னார். தான் பல ஆண்டுகள் பழகி வருவதால், பேச்சை விடை சைகையே மேலோங்கி இருப்பதாக சொன்னார். சிலர் தூக்கத்தில் பேசுவதுபோல, தான் சைகை செய்வது உண்டு என்றார். ஒருமுறை பயங்கர கனவு கண்டுகொண்டிருக்கையில், ”உதவி.. உதவி” என்று சைகை செய்ததை பார்த்த சிலர் சொல்லித்தான் அவருக்கே தெரிந்திருக்கிறது.
நினைவில், ”உனக்கு நீலக் கண்களென்றால், இன்னொருவருக்கு கருப்புக் கண்கள். அது போலத்தான் நாங்களும் வித்தியாசமானவர்கள்.” என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் நிலை. ஆனால், அவர்கள் கனவிலும் கூட தம்மை குறைபட்டுக்கொள்வதில்லை என்று புரிகிறது..


கீழே உள்ள படம் ஆங்கிலத்தில் உதவி (HELP) என்று சைகையில் காட்டுகிறது.

3 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

/// அவர்கள் கனவிலும் கூட தம்மை குறைபட்டுக்கொள்வதில்லை என்று புரிகிறது...///

மன உறுதி, திட்டமிடல், பொறுமை, ..., ..., என பலவற்றை நாம் அவரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்...

சிவக்குமார் said...

அமெரிக்கப் பள்ளிகள் பற்றி பல ஆச்சரியங்கள் கேள்விப்படுகிறேன். பொறாமையாக இருக்கிறது.
பேச இயலாதவர்கள் பேச முயன்றால் இரத்த வாந்தி எடுப்பார்களா ?

குலவுசனப்பிரியன் said...

//பேச இயலாதவர்கள் பேச முயன்றால் இரத்த வாந்தி எடுப்பார்களா ?//
அவர் பயன்படுத்திய சொல் “இரத்தமாக இருமுவார்கள் - they will cough blood”.

Post a Comment