
ஆசீப் மீரான் இப்படத்தைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு விமர்சித்திருந்தார். அப்போதே பின்னூட்டம் இட முடியவில்லை. பொறுக்கியின் இடுகைக்கு பின்னூட்டமாய் இடவேண்டியடது இங்கே தனிப் பதிவாய்:
என்னைப் பொருத்த வரை பல இந்தியப் திரைப் படங்களைப் போல இந்தப் படத்திலும் பிரச்சினைகளை அதன் உண்மையான புரிதல் இல்லாமல் பேச முனைந்திருக்கும் அரை வேக்காட்டுத்தனம் தான் தெரிகிறது.
முந்தைய ஆண்டு தொழில் கல்வி படித்து முடித்துவிட்டு பட்டறிவு எதுவும் இல்லாமலேயே மறு ஆண்டு ஆசிரியராக பாடம் எடுக்கிறார்களே, அது போல்தான் இருந்த்து.
முதலில் Dyslexia என்ற புத்தகங்களைப் படிக்க சிரமப்படும் குறை, ஒரு பெரும் பிரச்சினை இல்லை. படத்தில் உதாரணம் காண்பிப்பது போல் சிறு வயதில் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்கள் பின்னாளில் பெரும் விஞ்ஞானிகளாக ஆகியுள்ளனர்.
அதிலும் தெளிவாக வாய்ப் பேச்சால் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சிறுவனுக்கு உள்ள பிரச்சனை என்ன என்று பெற்றோர்கள் புரிந்துகொள்ள வில்லை என்று தொடர்ந்து காட்சிப்படுத்தி இருப்பது இயல்பிற்கும் இயற்கைக்கும் மாறானது**. ஆனால் படத்தில் கெட்டவர்கள் பெற்றோர்கள்தான். கண்டிப்பான சூழல்தான் அவன் வளர்ச்சிக்கு நல்லது என்று தொலை தூரத்தில் உள்ள ஊரில் விடுதியில் சேர்க்கிறார்கள். அப்பா தன் பையனுக்கு மன வளர்ச்சி குறைந்தவனா என்று,
மேல் நாடுகளில் கெட்ட சொல்லாக அறியப்படும் சொல்லை ( r-word) சொல்லி பல முறை கேட்கிறார். "Dyslexia பற்றி இணைய தளத்தில் படித்துப் பார்த்தோம், நாங்களும் எங்கள் பையன் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறோம்" என்று சொல்லி விட்டு விடுதிக்கு வந்த இடத்தில் பையனை பார்க்ககூட பிடிக்காமல் திரும்பிப் போகிறார். அந்தப் பையன் இன்னும் அதிகம் பாதிக்க கூடிய குறையுள்ளவனாக இருந்தால் இயக்குனர் பெற்றோர்களை
எப்படி கற்பனை செய்திருப்பாரோ?.
நல்ல வேளையாக உண்மை அவருடைய கற்பனை போல அவ்வளவு கேவலமாக இல்லை. படத்தில் சில இடங்களில் பின்னணியில் வளர்ச்சி
குன்றிய குழந்தைகளும் குடும்பத்தார்களும் தெரிகிறார்கள். அவர்கள் நடிக்கும் பெற்றவர்களைப் போலல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கலாம்.
**
மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட (Autism) தன் மகன் - டிட்டோ முகாபத்யாய் -க்கு ஒரு இந்தியத் தாய் எப்படி கல்வி புகட்டி, மருத்துவ உலகத்தை வியக்க வைத்திருக்கிறார் என்று அறிய கீழே உள்ள சுட்டிகளில் காண்க.
National Geographic
PBS.org
2 மறுமொழிகள்:
நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை அதே நேரத்தில் சமீபக்காலத்தில் வந்தப் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது ஒரு நல்லப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா.
//
இது ஒரு நல்லப்படம் என்பதில் சந்தேகம் இல்லை
//
இந்திய திரைப்படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லக்கூடிய படங்களின் தரமே மட்டமாக இருப்பது பெரும் குறை.
படம் பார்ப்பவர்களிடம் பச்சாதாபம் ஏற்படுத்தும் பழமையான உத்திதான் உள்ளது. பெற்றோர்களை வில்லன்களாகவும்
அவர்கள் இயல்பாக அறிந்து கொள்ளக் கூடிய விசயங்களை நாயகன் கண்டுபிடிப்பதாக காட்சிப்படுத்தி குழப்பி இருக்கிறார்கள்.
நாயகன் மீட்பராக இருக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு.
யதார்த்த நிலையை அறிய வேண்டுமானால் வேறு இடங்களுக்குத்தான் போக வேண்டும்.
Post a Comment