OLPC என்ற லாபநோக்கில்லாத நிறுவனம் 100 வெள்ளி (US$100) விலைக்கு சிறிய கணினி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், உலகம் முழுதும் குழந்தைகளின் கல்விப்புரட்ச்சிக்கு வழிவகுக்கும்.
இக்கணினிகள் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளின் அரசாங்க கல்வித்துறை அமைப்புகளுக்கு விற்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு (இலவசமாக?) விநியோகிக்கப்படும். இந்தியாவும் சீனாவும் இத்திட்டதில் முதன்மையாக இடம்பெற்றுள்ளன.
ஆராய்ச்சி இன்னும் முடிவுபெறவில்லையென்றாலும், முழுமையாக இயங்கும் மாதிரி வடிவங்கள் இம்மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டன. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாஸாச்சூஸட் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆசிரியர்களால் வடிவமைக்கப்படும் இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
- சிறிய, கனம் குறைந்த (1.5 கிலோவுக்கு கீழ் கொண்டுவரும் லட்சியம்) குழந்தைகளுக்கென்று பிரத்யேகமான வடிவமைப்பு.
- பிஞ்சுக்கைகள் நோகாதவண்ணம் தட்டச்சு செய்ய மென்மையான விசைப்பலகை.
- திரையை வளக்கமான வகையிலும், புத்தகம் போல் பிடித்துக்கொள்ளும் வகையிலும் மடக்கிக்கொள்ளலாம்.
- நகரும் பாகங்கள் இல்லாததால் நீடித்து உழைக்கக்கூடியது.
- கம்பியில்லாத தொடர்புகொள்ளும் (wireless) வசதியால் அருகருகில்் உள்ள இதே கணனிகளுடன் சேர்ந்து பெரிய கூட்டமைப்பு (network) ஏற்படுத்த முடியும்.
- புதுமையான அகன்ற தொடுஅட்டைமூலம் சுட்டி காட்ட, எழுத மற்றும் வரையும் வசதி.
- உள்ளடங்கிய ஒலி வாங்கி கூடவே தனி ஒலிவாங்கியை இணைக்கும் வசதி. ஒலிஅலைகளை பண்படுத்தும் பாகங்களே, அறிவியல் ஆய்விற்கு வெப்பம், மின்னழுத்தம் போல் இன்னும் பலவற்றை அளவிடும் மானியாகவும் வேலை செய்யும்.
- உள்ளடங்கிய ஒலிபெருக்கி, வெளி இணைப்பு வசதி.
- மூன்று USB2 இணைப்புக்கள், வெளி உபகரணங்களை பயன்படுத்த.
- குறைவான மின்சக்தி தேவை. முழுவதும் சக்தியூட்டப்பட்ட பேட்டரியில், பள்ளிக்கூட நேரம் முழுவதும் தடையில்லாமல் இயங்கும். மின்சார இணைப்பு, வாகனங்களில் உள்ள பேட்டரி அல்லது மனித சக்தியால் கைகால்களால் டைனமோக்களை சுழலச்செய்து பேட்டரிகளுக்கு மறுபடியும் சக்தியூட்டலாம்.
- மென்பொருட்கள் லினக்ஸை சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
. இன்னும் பல.
வேகமாக இறுதி வடிவம் பெறும் இந்த கணினி விரைவில் மாணவர்களுக்கு சென்றடைய வாழ்த்துவோம்.
நன்றி
மேலும் விபரங்களுக்கு (wikipedia)