அன்றும் இன்றும்
Tuesday, February 17, 2009Labels: மானுடம்
அன்று உதித்த கதிர்கள்தான் இன்றும்
அதே விடியல்.
அன்று பாடிய புள்ளினங்கள்தாம் இன்றும்
அதே கீதம்.
அன்று பெற்றத் தாய்தான் இன்றும்
அதே பாசம்.
அன்று கூடிய நெஞ்சங்கள்தான் இன்றும்
அதே நேசம்.
அன்று பிரிந்த உயிர்கள்தான் இன்றும்
அதே துயரம்.
அன்று கட்டிய கதைதான் இன்றும்
அதே கடவுள்.
அன்று உழைத்த மனிதர்தாம் இன்றும்
அவன் படைப்பே உயர்ந்தது நாளும்.
(அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)
Subscribe to:
Posts (Atom)