குலை நடுக்கிய Jet Airways
Tuesday, May 22, 2007சென்ற சனிக்கிழமை 18/05/2007 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு Jet Airwaysன் விமானம்: 9W 3520ல் பயணம் செய்தேன். அரை மணி நேரம் தாமதமாக 21:30க்கு புறப்பட்ட விமானம் சென்னையில் தரை இறங்கும்போதுதான் பயணிகள் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளும்படி நேர்ந்தது.
முதலில் விமானம் இடதுபுறம் பலமாக சாய்ந்தது. அதை ஈடுகட்ட வலப்புறம் மறுபடியும் பலமாக சாய்ந்தது. மீண்டும் இடதுபுறமும் வலதுபுறமும் தடுமாறி ஒருவழியாக சமநிலைக்கு வந்த மறுகணமே அதிவேகமாக தரை இறங்கியது. வேகத்தை உடனடியாக குறைக்க முடியாததால், ஓடுதளத்தில் திருப்பங்களில் நிலைகொள்ளாமல் ஓடி எதில்போய் முட்டப்போகிறதோ என்று பயம் கொள்ள வைத்தது. விமானி விமானத்தை நிறுத்திய பின் சம்பிரதாயமாக சொல்லும் வாழ்த்துக்களைக்கூட சொல்லவில்லை.
பயணிகள் பலரும் பணிப்பெண்களிடம் வாதிட்டார்கள். விமானநிலையத்தில் நானும் மற்றொரு பயணியும் நிறுவனத்தின் மேலதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விமானியை மீண்டும் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்று சொன்னோம். நுட்பியல் காரணமாதலால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்கள். என் வீட்டு முகவரியையும் மின்அஞ்சல் முகவரியையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். நான் மேலும் 30 மணிநேரம் விமானப் பயணம் செய்து வீட்டிற்கு வந்த பின்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவர்களுடைய இணையதளத்தில் சென்று கொடுத்தப் புகாருக்கும் எந்த பதிலும் இல்லை. காமாராஜ் உள்நாட்டு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார்செ ய்ய அவர்களின் தொடர்புகள் தெரியவில்லை.
இபோதைக்கு நான் செய்ய முடிந்தது, உங்கள் பாதுகாப்பிற்கு Jet Airwaysஐ புறக்கணிக்கும்படி வேண்டுவது ஒன்றே.
Subscribe to:
Posts (Atom)